பீஜிங்,

ந்தியா சீனா இடையே டோக்லாம் பிரச்சினை சமீப காலமாக வலுப்பெற்று வருகிறது. சற்றுகாலம் அமைதியாக இருந்த இந்த பிரச்சினை தற்போது மீண்டும் வெடித்து உள்ளது.

டோக்லாம் பகுதியில் சீனா மீண்டும் சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால், எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் வெளியாகும், குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையில், இந்தியா குறித்து கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை வெளியாகி உள்ளது. இந்திய ஊடகங்கள் டோக்லம் பிரச்சினையை பெரிதுபடுத்தி வருவதாக குற்றம் சாட்டி உள்ளது.

சீனாவின் குளோபல் பத்திரிகை எழுதியுள்ள கட்டுரையில்,  சீனப்பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படியே டோக்லாம் பகுதியிலும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் தற்போது புதிதாக தொடங்கப்பட்ட திட்டம் கிடையாது. ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைபெறும் வரும் இந்த பணியானது இந்திய சீன எல்லையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் நடந்து வருகிறது.

ஆனால், இந்தியாவோ அதுபற்றி புரிந்துகொள்ள முயற்சிக்காமல் செயல்படுவது விசித்திரமாக உள்ளது. இந்திய சமுதாயத்திற்கு சித்தபிரமை பிடித்துள்ளது என்று கூறி உள்ளது.

மேலும், இந்தியாவிலுள்ள மீடியாக்கள் இதுகுறித்து உணர்ச்சிகரமாக பேசி, தேசியவாதத்தை தூண்டி வருகிறது. இதற்கு சீனா பொறுப்பாக முடியாது.

டோக்லாம் பகுதி  சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. சீன அரசால் கண்காணிக்கப்பட்டு வரும் பகுதி. இங்கு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியது சீன அரசின் கடமை.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.