சென்னை:

காங்கிரஸ் கூட்டணி தேவையில்லை என்று துரைமுருகன் பேசிய விவகாரம் திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், துரைமுருகனக்கு ஞாபசக்தி குறைந்துவிட்டதோ, அன்று பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது எங்கள் தயவு தேவைப்பட்டதா என்று  துரைமுருகனுக்கு காங்கிரஸ் நிர்வாகளில் ஒருவராக மோகன் குமாரமங்கல்ம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சயின  காங்கிரஸ் கட்சியினரை திமுக புறக்கணித்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி, கூட்டணி தர்மத்தை மதிக்க திமுக தவறி விட்டது என்று  அறிக்கை வெளியிட்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நிலவி வந்த உட்பூசல் வெளிப்படையாக அம்பலமானது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. டெல்லி தலைமை உள்பட தமிழக தலைமையும் திமுகவுடன் மன்னிப்பு கோரிய நிலையில், இரு கட்சிகளும் இணைந்தே உள்ளது என்று தெரிவித்தன.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி. டி.ஆர்.பாலு, மன்னிப்பு கோரினால் மட்டும் போதுமா? என டிவிட் போட்டு கேள்வி எழுப்பினார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்ற திமுக மறைமுகமாக வற்புறுத்துவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், டெல்லியில்,  காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை கே எஸ் அழகிரி சந்தித்து விளக்கம் அளித்தார். பின்னர்  செய்தியாளர்களிடம் பேசியவர், திமுகவும் காங்கிரஸும் எப்போதும் இணைந்த கரங்கள் என்றார்.

ஆனால், அடுத்த நாளில் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் விலகி போனால் போகட்டும். எங்களுக்கு நஷ்டம் இல்லை என கூறினார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துரைமுருகனுக்கு பதில் தெரிவிக்கும் வகையில், சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் டிவிட்டரில், இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் துரைமுருகனக்கு ஏன் வரவில்லை? கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில், காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான மோகன் குமாரமங்கலம் துரைமுருகனுக்கு சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காட்பாடியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு.துரைமுருகன் அவர்கள் காங்கிரஸ் பற்றி பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி போனால் எங்களுக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்று திரு.துரைமுருகன் கூறினார். குறிப்பாக எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று சொன்னார். துரை முருகன் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஆகிவிட்டது என்று அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பதவியை காப்பாற்ற 2006-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை அரசாங்கத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் எந்தவிதமான பங்கையும் கேட்காமல் பெருந்தன்மையுடன் வழிநடத்தினோம். அந்த ஆட்சியில் திரு.துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அன்றைக்கு அவருக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் தயவு தன்னுடைய பதவியை காப்பாற்றுவதற்காக தேவைப்பட்டது என்பதை அவர் மறந்து விடக்கூடாது.

2011-ல் உங்களுடைய கூட்டணியில் தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்று தெரிந்தும் கூட அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதாவின் அழைப்பை புறக்கணித்தோம். கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டோம். அன்றைக்கு உங்களுக்கும் காங்கிரஸ் தேவைப்பட்டது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. கூட்டணி 2019 வேலூர் இடைத்தேர்தலில் உங்கள் மகன் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸின் பங்கில்லை என்று நினைக்கிறீர்களா? திரு.துரைமுருகன் என்னைவிட வயதில், அனுபவத்தில் பெரியவர். ஆக அவருக்கு நான் அறிவுரை கூறும் இடத்தில் இல்லை. வேண்டுகோள் மட்டுமே அவரிடம் வைக்க விரும்புகிறேன். காங்கிரஸ் மட்டுமல்ல உங்களுடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் யாரையும் குறைத்து மதிப்பிட்டு பேசாதீர்கள்.

இவ்வாறு அதில்  குறிப்பிட்டுள்ளார்.