தமிழக பாஜகவினரிடம் மோடி என்ன கேட்பார் தெரியுமா?
**** விரைவில் தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருக்கிறார்! தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள 12 புதிய அரசு மருத்துவக்கல்லூரி களைத் திறந்து வைத்திட பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் எப்போதுமே பா. ஜ. க. மற்றும் இந்துத்வாவுக்கு எதிரான மாநிலம் என்பதால், எப்படியும் இங்கு வெற்றி பெற பிரதமர் மோடி கடுமையான திட்டங்கள் வகுக்கிறார்!
தமிழ் மக்களின் அடையாளமான திருக்குறள், ஆத்திச்சூடி போன்றவற்றிலிருந்து சில பாடல்களை எடுத்து மேடைகளில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்!
இப்போது தமிழகத்துக்கு வரும் முன்பும், தனது கட்சிக்காரர்களிடம் என்னென்ன கேட்பார் என்பதை இந்தக் கார்ட்டூன் சொல்கிறது!
*** ஓவியர் இரா. பாரி.