டெல்லி: தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அனுமதி தேசிய மருத்துவ ஆணையம் கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது வரை 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் 18 தனியார் மருத்துவக்கல்லூரிகள் என மொத்தம் 55 மருத்துவக்கல்லூரி கள் உள்ளன. இந்த நிலையில், மேலும் 2 தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவிலா மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படிப்பை முடிக்கும் வசதி ஏற்பட்டு  உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரிகள் அனைத்தும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது,  இந்தியாவில் 8 மருத்துவர்களில் ஒருவர், தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர் என ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளை கட்டுவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த மேலும் சில மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.