சென்னை: தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டியுள்ளது.
மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வேலை முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நிலவி வரும் கொரோனா சூழ்நிலைகளின் அடிப்படையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அரசு வேலை பெற விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் அரசு வேலைக்கான பணி வழங்கப்பட்டு வருகிறது.
இநத் நிலையில், மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1,36,515 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் 85 ஆயிரத்து 310 நபர்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 42 ஆயிரத்து 711 நபர்களும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
24 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் 24 லட்சத்து 88 ஆயிரத்து 254 பேர்.
36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 12 லட்சத்து 26 ஆயிரத்து 417 பேர்.
8 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10907 பேர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.