டேய்..தில்லு இருக்கா?: வழக்கறிஞர் பெயரில் விஜய்யை எச்சரிக்கும் ஆடியோ

Must read

“உச்சநீதி மன்ற வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி பேசுகிறேன்” என்று துவங்கும் ஆடியோ ஒன்று நடிகர் விஜய், இயக்கநர்கள் அமீர், ரஞ்சித் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சிக்கிறது. இந்த ஆடியோ இப்போது வைரலாகி வருகிறது.

ஆடியோவில் பேசுபவர் தெரிவிப்பதாவது”

“ நடிகர் விஜய்…  உனக்கு, உய்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். கிருஷ்மூர்த்தியின் எச்சரிக்கை…  நீ மெர்சல் படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கே… அதுக்கு  எவ்வளவு இன்கம்டாக்ஸ் கட்டியிருக்கே.. மெர்சல் படம் நாலு நாளில்  மூன்னுறு கோடி – நானூறு கோடி வசூல் பண்ணியிருக்கிறதா சொல்றாங்க…  அதுக்கு நீ இன்கம்டாக்ஸ் கட்டியிருக்கியா.. இல்லே..  அவன்.. தயாரிப்பபாளர் முரளி ராமசாமி கட்டியிருக்கானா?

வீரவசனம் பேசறதெல்லாம் படத்தோடு வச்சுக்கோ விஜய்.,  புரியுதா.. உனக்கு நான் எச்சரிக்கிக்கை விடுக்கிறேன்.  இப்போ.. மதசாயம் பூசறாங்க சாதிச்சாயம் பூசறாங்கன்னு இந்த கதை எல்லாம் பேசக்கூடாது.

உன்மையிலேயே நீ தில் உள்ள மனிதனா இருந்தா.. போல்ட்னஸ் உள்ளவனா இருந்தா கோயில் இட்ததோடு சேர்த்து கோயில்கள், மசூதிகள், சர்ச்கள் உள்ள இடத்துல மருத்துவமனை கட்டுங்கன்னு வசனத்தை மாத்து.

இந்துக்கள் இளிச்சவாய்னு நினைச்சுக்கிட்டிருக்கிறாயடா விஜய்

இந்திய தண்டனை சட்டப்படி குற்றம் பண்ணியிருக்க.. மத பிரிவினையை தூண்டியிருக்க.. பொது அமைதிக்கு குந்தகம் விளைவி்ச்சிருக்க

ஜாக்கிரதையா இரு விஜய்.. சட்டப்படி உன்னை எப்படி எதிர்கொள்ளணுமே அப்படி எதிர்கொள்வோம்

நாங்க என்ன இளிச்சவாய்னு நினைச்சிக்கிட்டிருக்கியாடா நீ..

அதே மாதிரி தயாரிப்பாளர் முரளிக்கு சொல்லிக்கிறேன்.. மரியாதையா வசனத்தை மாத்திடு

டேய் அமீரு நீ எல்லாம் டைரக்டராடா..  டேய் ரஞ்சித்து மரியாதையா வாலை அடக்கிட்டு உட்காரு, புரியுதா” என்று அந்த குரல் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி எச்சரிக்கிறது.

தற்போது இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

More articles

Latest article