வதந்திகளை நம்ப வேண்டாம்: நாளை பள்ளி திறப்பு

Must read

சென்னை:

ஏற்கெனவே அறிவித்தபடிதமிழகத்தில் நாளை (07.06.2017)  பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஏழாம் தேதி பள்ளி துவக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் வரும் 15ம் தேதி திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். அதே  போல, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் 15ம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயில் படிப்படியாக குறைந்து வருவதால் திட்டமிட்டபடி நாளையே பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை உட்படதமிழகம் முழுதும் திட்டமிட்டபடி நாளை ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

More articles

Latest article