சென்னை,

திமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள குழறுபடிகளை தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு இதுவரை 18 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஜெ.மறைவுக்கு இரண்டாக உடைந்த அதிமுக, தற்போது மேலும் உடைந்துள்ளது. தற்போது அதிமுக அம்மா அணி இரண்டாக உடைந்துள்ளது.

இதில் தற்போதைய அமைச்சரவையை சேர்ந்த பெரும்பாலான அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி ஆதரவாக தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக டிடிவி தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கட்சியைவிட்டு ஒதுங்கி இருக்குமாறு கோரி உள்ளனர்.

இந்நிலையில், டிடிவி தினகரன் மீண்டும் கட்சி பணியில் இறங்குவேன் என்று கூறி உள்ளார். இதன் காரணமாக அதிமுக அம்மா அணியும் தற்போது இரண்டாக பிளவு பட்டுள்ளது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சென்னை பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் உள்பட12 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வந்துள்ள நிலையில்,  எம்.எல்.ஏ.க்கள் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், பன்னீர்செல்வம், மோகன்,  ஆகியோர் தினகரனுடன் சந்தித்தனர்,

இன்று காலை பரமக்குடி எம்எல்ஏ முத்தையாவும், மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தினகரனுக்கு  இதுவரை மொத்தம் 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக வரும் 14ந்தேதி  கூட இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒழுங்காக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.