திமுகவின் 100 நாள் ஆட்சிக்கு பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு

Must read

கும்பகோணம்: 
திமுகவின் 100 நாள் ஆட்சி, நன்றாகவும் நடுநிலையோடும் உள்ளது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோயிலுக்கு வந்த  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரமஹத்தி தோஷ பரிகாரம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  திமுகவின் 100 நாட்கள் ஆட்சி நன்றாகவும் நடுநிலையோடும் உள்ளது என்றும்,  இது தொடர வேண்டும்” என்றார்.
முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை எனத் தெரிவித்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் குறித்த கேள்விக்கு, பொதுமக்களும் அர்ச்சகர்களும் இதனை ஏற்றுக் கொண்டால் நாங்களும் இதை ஏற்றுக் கொள்வோம் என்று பிரேமலதா தெரிவித்தார்.

More articles

Latest article