சென்னை: 
த்திய அரசின் மீன்வள மசோதாவைத் தமிழக அரசு எதிர்க்கும் என்று அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய கடல்சார் மீன்வள மசோதா மூலம் மீன்பிடித் தடைக்காலம், மீன் பிடிப்பதற்கான நேரம் உள்பட அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்படும் என்று மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,  பேரவையில் நடைபெற்ற நிதிநிலை விவாதத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் மீன்வள மசோதா தமிழக மீனவர்களைப் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. ஏற்கனவே இந்த மசோதாவைத் திரும்பப் பெறவும், திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய கடல்சார் மீன்வள மசோதாவைத் தமிழக அரசு நிச்சயம் எதிர்க்கும் என்று தெரிவித்தார்.