சென்னை,

திமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக, ஓபிஎஸ் வலுக்கட்டாயமாக சசிகலா தரப்பினரால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக முயற்சித்தார். ஆனால், அவருக்கு சிறை தண்டனை உறுதியாகி சிறைக்கு சென்றுள்ளதால், அவரது பினாமியாக எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக நேற்று மாலை பதவி ஏற்றார்.

இதைத்தொடர்ந்து நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் கூறியதாவது,

தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள புதிய ஆட்சி எத்தனை நாள்கள்  நீடிக்கும் என்பதை தீர்மானிக்க முடியாது என்றார். மேலும்  சட்டப் பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக உறுப்பினர்கள்  யாருக்கும் ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தின் எதிர்கால அரசியல் திமுகவின் வெற்றியைப் பொருத்தே அமையும் என்றும்,  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்றும் கூறினார்.