பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமனம்! ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Must read

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமிக் கப்பட்டுள்ளனர், மேலும் துணைப்பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக  அறிவித்தார்.

திமுக தலைமை அறிவித்தபடி இன்று காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான   அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளி மாவட்டஙகளைச் சேர்ந்தவர்கள் காணொளி காட்சி மூலம் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இன்று காலை 10மணி அளவில் பொதுக்கூட்டம் தொடங்கியதும்,  திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டதாக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும், திமுக புதிய பொருளாளராக டி.ஆர்.பாலு, பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர், பொருளாளருக்கு பொன்னாடை போர்த்தி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, திமுக சட்டத்திட்ட விதி பிரிவு 17(3)ன் படி, திமுக துணைப் பொதுச்செயலாளராக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக திமுக-வில் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 3-ல் இருந்து 5-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. துணைப் பொதுச்செயலராக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏற்கனவே உள்ளனர். மேலும் திமுக-வில் துணைப்பொதுச் செயலாளர் களாக ஆர்.ராசா மற்றும் பொன்முடியை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவின் 4 வது பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  திமுகவின் 8வது பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருகிறது.

More articles

Latest article