சென்னை: அமலாக்கத்துறை  சோதனை மற்றும் விசாரணைக்கு ஆஜராகி நள்ளிரவில் வீடு திரும்பி அமைச்சர் பொன்முடியுடம் திமுக தலைவரும்,  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போனில் பேசினார். அப்போது, விசாரணை குறித்து கேட்டறிந்த முதல்வர் , துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் விசாரணையை எதிர்க்கொள்ளுமாறும், திமுக துணை நிற்கும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த திமுக ஆட்சியின்போது கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது, செம்மண் குவாரியை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கூறிய விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பல்வேறு முறைகேடு புகார்கள் தொடர்பாக, தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதமசிகாமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நேற்று காலை முதலே சோதனை நடத்தியது.

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை வீடு, கே.கே.நகரில் உள்ள உறவினருக்கு சொந்தமான மருத்துவமனை, விழுப்புரத்தில் உள்ள வீடு, நிதி நிறுவனம், கல்லூரி ஆகிய இடங்களில் நேற்று காலை 7 மணிமுதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது,  முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம், நகைகள் கைப்பற்றிய அமலாக்கதுறையினர், பொன்முடிக்கு சம்மன் அனுப்பி அமலாக்க துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 13 நேரத்துக்குப் பின் இரவு 8 மணிக்கு அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  அதையடுத்து, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டு, அவரை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில்,  இன்று முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியிடம்  தொலைபேசியில் பேசினார். அப்போது, அமலாக்கத்துறை விசாரணை குறித்து கேட்டறிந்த முதல்வர் , துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் விசாரணையை எதிர்க்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். பாஜகவின் பழிவாங்கல் நடவடிக்கையை முறியடிக்க திமுக துணை நிற்கும். அரசியல் மற்றும் சட்ட ரீதியாவும் திமுக துணை நிற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக  இன்று காலை அமைச்சர் பொன்முடியின் வீட்டுக்கு அமைச்சர்கள் கே.எஸ்.நேரு உள்பட பல அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து விசாரித்து சென்றனர்.

அமலாக்கத்துறை சம்மன் காரணமாக பொன்மு,  இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார்..

இதுகுறித்து கூறிய திமுக வழக்கறிஞர்கள், அமைச்சர் பொன்முடி,  ஆளுநரை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 72 வயதாகும் அவரை நள்ளிரவில் விசாரித்தது மனித உரிமை மீறல். அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அமைச்சர் பொறுமையாக பதில் அளித்தார் என தெரிவித்துள்ளனர்.