சென்னை: தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.கவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக விளங்குபவர் தமிழன் பிரசன்னா. அவரது வீடு மூலக்கடை அருகே உள்ள எருக்கஞ்சேரியில் உள்ளது. இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போதும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக, மனம் உடைந்தஅவரது மனைவி, சென்னை எருக்கங்சேரியில் உள்ள  வீட்டில் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

தமிழன் பிரசன்னா தற்போது கொடுங்கையூர் காவல்நிலையத்தில் உள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு திமுகவினர் குவிந்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.