டெல்லி: மத்தியஅரசுக்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய நிதிநிலை அறிக்கையில்,  தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும்‘, தமிழக வெள்ளப்பாதிப்புக்கு வெள்ள நிவாரணம் தராததை கண்டித்தும் டெல்லி நாடாளுமனற் வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து  ஆர்ப்பாட்டம் செய்தனர்.பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள், மத்தியஅரசுக்கு எதிரான சுலோகங்களுடன் கூடிய  பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,  மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.  எம்.பி.க்களுடன் காங்கிரஸ் உள்பட திமுக தோழமைக் கட்சிகளும் கருப்பு சட்டை அணிந்து, பதாகைகள் ஏந்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Video: Thanks ANI