சென்னை:
வரும் 14ஆம் தேதி திமுக எம்.பி.க்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் 17 அமர்வுகள் நடைபெறவுள்ளன.
இதில் பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட முக்கிய விவாகர்த்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளன.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 14ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பப்படும் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.