தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வகம் நடத்தும் க்ரூப் 2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப் பாடத்தை நீக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், “டிஎன்பிஎஸ்சி நடத்தும், க்ரூப் 2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசுப் பணியில் சேருவதற்கே இது வழி வகுக்கும். தமிழக அரசு உடனடியாக இந்நடவடிக்கையை கைவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வகம் நடத்தும் க்ரூப் 2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப் பாடத்தை நீக்கிவிட்டதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.