துரை

பாஜகவில் இன்று காலை இணைந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணனுக்குத் தேர்தல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.   இதற்கான பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்றே முடிவானதாகவும் இன்று மாலை வெளியிடப்படும் எனவும் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் எல் முருகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவில் தற்போது திருப்பரங்குன்றம்  சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வரும்  டாக்டர் சரவணனுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கவில்லை.  இந்த முறை அந்த தொகுதி திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.   இதையடுத்து சரவணன் இன்று காலை பாஜகவில் இணைந்தார்.

இது குறித்து அவர், “நான் ஆறுவருடங்களுக்கு முன்பு பாஜக உறுப்பினராக இருந்தேன்.  பிரதமர் மோடியின் தலைமையால் கவரப்பட்டு மீண்டும் இணைந்தேன்.  நான் மிகவும் மகிழ்வாக உள்ளேன்.  கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் அனுப்பியது நமது தலைமையின் ஒரு சாதனை என்பதை யாரும் மறுக்க முடியாது” எனப் பதிந்தார்.

இன்று வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலின்படி மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.   இன்று காலை இணைந்தவருக்கு நேற்றே தயாரான பட்டியலில் தேர்தல் வாய்ப்பு அளிக்கப்பட்டது குறித்து அரசியல் ஆர்வலர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.