சென்னை: திமுக சார்பில், நகராட்சி மன்றத் தலைவர்கள் பதவிக்கு மாவட்ட வாரியாக  போட்டியிடும் உறுப்பினர்கள் விவரங்களை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் நேற்று (மார்ச் 2ந்தேதி) கவுன்சிலர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதையடுத்து, ,மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு நாளை (மார்ச் 4 ஆம் தேதி) மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர்  போன்ற பதவிகள் போட்டிக்கு போட்டியிடும் திமுக உறுப்பினர்கள் விவரங்களை  திமுக தலைமை  வெளியிட்டு உள்ளது.

முன்னதாக கூட்டணி கட்சிகளுக்கு   மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் போன்ற பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அதன் விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, நகராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடுவோம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. முழு விவரம் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…

Perur Chairman Candidate Arikkai – 3.3.2022

Perur Chairman Candidate Arikkai – 3.3.2022-02

மேயர், துணைமேயர் பதவிக்கு போட்டியிடும் திமுக உறுப்பினர்கள் விவரம்

Mayor and Deputy Mayor Arikkai – 3.3.2022