சென்னை: திமுக சார்பில் மேயர், துணைமேயர் பதவிக்கு போட்டியிடும்  உறுப்பினர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு 28வயதான பிரியா பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர்  போன்ற பதவிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கு திமுக போட்டியிடுகிறது.

சென்னை மேயர் பதவிக்கு 28வது இளம்பெண் பிரியா என்ற முதுநிலை பட்டதாரி அறிவிக்கப்பட்டு உள்ளார். துணைமேயர் பதவிக்கு  மகேஷ் குமார் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை மாநகரா மேயர் பதவியை  இதுவரை 2 பெண்கள் மட்டுமே அலங்கரித்துள்ள நிலையில், 3வது பெண் மேயராக பிரியா என்ற இளம்பெண் அலங்கரிக்க இருக்கிறார். ஏற்கனவே 1957ம் ஆண்டு தாரா செரியனும், 1971-72ம் ஆண்டுகளில் காமாட்சி ஜெயராமன் என்ற பெண்ணும் மேயர் பதவியில் இருந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெண் மேயர் சென்னைக்கு கிடைத்துள்ளார்.

சென்னை துணைமேயராக போட்டியிடும், சைதை மகேஷ்குமார், தாம்பரம் மாநகராட்சி மேயராக திருமதி வசந்தாராணி கமலக்கண்ணன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எம்.டெக் பட்டதாரி. பொறியியல் துறை வல்லுநர். தாம்பரம்  துணை மேயர் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர்.ஜெகத்ரட்சகன் எம்.பி-மைத்துனர்  காமராஜ் போட்டியிடுகிறார்.

மாவட்ட (காஞ்சிபுரம்) மேயராக போட்டியிட இருப்பவர்  திருமதி. மகாலட்சுமி யுவராஜ். இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த பொறியாளர் பணியிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டவர்.

அதேபோல கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக கல்பனா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை மேயர் வேட்பாளராக வெற்றிச்செல்வன் போட்டியிடுகிறார். மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக இந்திராணி போட்டியிட உள்ளார்.

பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் நேற்று (மார்ச் 2ந்தேதி) கவுன்சிலர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதையடுத்து, ,மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு நாளை (மார்ச் 4 ஆம் தேதி) மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெற்ற முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணைமேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேருராட்சி தலைவர்களுக்கான தேர்தலில்  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள்  கோடிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து திமுக சார்பில் சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி தலைவர்கள் துணைத்தலைவர்கள் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடுபவர்கள்  குறித்த விவரங்களை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு