சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு  செய்துள்ளது. இதுதொடர்பான மனுவில் கையெழுத்திட திமுக மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. இந்த விவகாரம், தற்போது நடைபெற்றை கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தில் மேலும் முற்றியது. இந்த விஷயத்தில் மாநில அரசின் நடவடிக்கையை ஆளுநர் நேரடியாக விமர்சனம் செய்தார். எந்த ஒரு நாடும் ஒரு மத்த்தை சார்ந்து இருக்கும் எனவும் ஆளுநர் தெரிவித்து இருந்தார். இதனால் திமுக  மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளுநரை விமர்சித்து வருகின்றன. தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திமுக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அண்ணா அறிவாலயத்தில் உள்ள தீர்மானத்தை படித்து பார்த்து வருகிற நாளைக்குள் (3ஆம் தேதி ) கையொப்பம் இடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.