சென்னை: நடப்பாண்டில் 50% ஓபிசி மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு, திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனிடையே இன்று, மருத்துவப் படிப்பில் ஒபிசி மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந் நிலையில் இந்த ஆண்டு 50% ஓபிசி மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஓபிசி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடை முறைப்படுத்தப்படாதது ஏமாற்றம் தருகிறது. உச்ச நீதி மன்ற தீர்ப்பால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்விக்குள்ளாகும்.
50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும். கருத்தியல் வேறுபாடுகளைத் தாண்டி நாம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.