டில்லி

நாடாளுமன்றத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்தக் கோரி திமுக நோட்டிஸ் அளித்துள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படாமல் இருந்து.   சுமார் 4 மாதங்களுக்கு மேல் இந்நிலை தொடர்ந்தது.  தற்போது மீண்டும் பெட்ரோல மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த 8 நாட்களுக்குள் 7 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதுவரை 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4.54 அதிகரித்துள்ளது.  இதைப் போல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.4.57 அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டிஸ் அளித்துள்ளார்.