திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல – அமைச்சர் சேகர் பாபு

Must read

சென்னை:
திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில்களில் தமிழில் அர்ச்சனை, ஓதுவார்களுக்கு ஊக்கத் தொகை, பயிற்சி பள்ளிகள், அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை, கோயில்களின் பெயரில் அறக்கட்டளை பள்ளிகள், கல்லூரிகள் என பல திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 437 நபர்களிடம் இருந்து ரூ.1,640 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், இறை சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும் என்றும் கூறினார்.

More articles

Latest article