புதுச்சேரி மாநிலத்தில், காங்கிரஸ் – திமுக கூட்டணியில், கடந்தமுறையைவிட இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக.

கடந்தமுறை 9 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட திமுக, இந்தமுறை இரட்டை இலக்கத்தில் 13 தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பை பெற்று, தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது.

கடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்தமுறை 15 தொகுதிகளில் மட்டுமே களம் காண்கிறது. அதேசமயம், இந்தமுறை காங்கிரஸ் – திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் & இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்துள்ளன. அவைகள் தலா 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

ஒருபக்கம் பாஜக + அதிமுக + என்ஆர் காங்கிரஸ் என்ற கூட்டணி இருக்கும் நிலையில், காங்கிரஸ் – திமுக கூட்டணியில் சுமூகமாக தொகுதி உடன்பாடு முடிந்துள்ளது.

இந்த உடன்பாட்டில், அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி அதிக லாபம் பெற்ற கட்சியாக திமுக உள்ளது என்பதே உண்மை!