சென்னை: மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர்  போன்ற பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், 2 துணைமேயர், 6நகராட்சி தலைவர் உள்பட 37 பதவிகளை திமுக தலைமை ஒதுக்கி அறிவித்துள்ளது.

21 மாநகராட்சிகளில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 20 மாநகராட்சி மேயர்பதவிகளும் திமுகவை வைத்துள்ளது. கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியும், சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சியுன் துணைமேயர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் நேற்று (மார்ச் 2ந்தேதி) கவுன்சிலர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதையடுத்து, ,மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு நாளை (மார்ச் 4 ஆம் தேதி) மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

முன்னதாக திமுகவில் கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் சில இடங்களில் மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் போன்ற பதவிகளை கேட்டு வந்தன. இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் 4 பேர் குழுவை திமுக தலைமை அமைத்து ஆய்வு செய்தது வந்தது. இதையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெற்ற முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணைமேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேருராட்சி தலைவர்களுக்கான தேர்தலில்  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள்  கோடிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி விவரம் வெளியாகி உள்ளது.

மேயர்:

கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

துணை மேயர்:

சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் துணைமேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நகராட்சி தலைவர்:

தேவகோட்டை, தேனி, காங்கேயம், சுரண்டை, கருமத்தம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம் உள்பட 6 நகராட்சி தலைவர்கள் பதவிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

துணை நகராட்சி தலைவர்:

கடலூடர், ஆரணி, நரசிங்கபுரம், காரமடை, குடியாத்தம், திருவேற்காடு, குன்றத்தூர், தாராபுரம், உசிலம்பட்டி.

பேருராட்சி தலைவர்

மங்களம்பேட்டை, சின்னசேலம், வடுகப்பட்டி, பூலாம்படி, பிக்கட்டி, பேரையூர், பட்டிவீரன்பட்டி, திருப்பெரும்புதூர்.

பேரூராட்சி துணைத்தலைவர்

சங்கராபுரம், ஜகதால, கீழ்குந்தா, மூலைக்கரைப்பட்டி, கன்னிவாடி, நங்கல்லி, கருப்பூர், டி.என்.பாளையம், நாட்ராம்பள்ளி, உடையாளர்பாளையம், கணியூர்