சென்னை: தமிழக மக்களின் வரவேற்பை பெற்ற ‘மினி பஸ்’ஐ மீண்டும் இயக்க திமுக அரசு முடிவு செய்துள்ளத. இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில், , மாநகர பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளில் வசிப்போருக்காக மினி பஸ் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார்.  கடந்த அதிமுக ஆட்சியின்போது,  2013 பட்ஜெட்டில், சென்னையில், மாநகர பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளில் வசிப்போருக்காக, 2012 – 13 பட்ஜெட்டில், ‘100 மினி பஸ்கள் இயக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது. பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், மினி பஸ்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மினி பஸ் தொடங்கப்பட்டது.

கடந்த 2013ம் ஆண்டு ம ஜெயலலிதா ஆட்சியின்போது மினி பஸ் திட்டம்  முதன்மறையாக அமல்படுத்தப்பட்டது. 2013ம் ஆண்டு அக்டோபர் 22ந்தேதி அன்று சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில், முதல் கட்டமாக சென்னையில்,  50 மினி பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, மினி பஸ் சேவை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. சென்னையின் உள்பகுதி உள்பட பல கிராமங்களிலும் மினி பஸ் இயக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த பேருந்தானது, சென்னையில் உள்பகுதிகளில் வசித்து வரும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் முதியோர்கள், ஏழையோர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பேருந்துகளுக்காக நெடுஞ்சாலைகளுக்கு நடந்து  வரும் நேரமும் மிச்சமானது. இதனால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால், அதற்கு பிறகு வந்த எடப்பாடி அரசு மினி பஸ் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை. பழுதடைந்த பேருந்துகளுக்கான புதிய பேருந்துகள் வாங்கவும், இயக்கவும் முன்வரவில்லை. இதையடுத்து 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,  அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை முடக்கியபோது போல மக்களின் வரவேற்பை பெற்ற மின் பஸ் திட்டமும் முடக்கப்பட்டது. இதனால் சென்னைவாசிகள் கடும் அவஸ்தை பட்டு வருகின்றனர்.

தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அரசு மக்களை கவர மீண்டும் மினி பஸ் திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே, பொதுமக்களிடம் வரவேற்பை பெற்ற அம்மா உணவகத்தை மேப்படுத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது  மினி பஸ் திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்த  உள்ளது.

இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளத. அதன்படி,   திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும். ஆனால்,  தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,   எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என RTO-க்கள் முடிவு செய்யலாம் என்று கூறிய தமிழ்நாடு அரசு,   அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். அனைத்து மினி பஸ்களிலும் GPS வசதி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.