பட்டபகலில் நடுரோட்டில் திமுக பெண் நிர்வாகி வெட்டிக்கொலை!

Must read

சென்னை:
சென்னை கொருக்குப்பேட்டையில் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொருக்குப்பேட்டை மேற்கு கே.ஜி.கார்டன் தெருவை சேர்ந்த  குமாரின் மனைவி லட்சுமி(வயது 40).  இவர்,    42 வது வட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளராக இருந்தார். இன்று காலை 11 மணி அளவில் தனது வீட்டு அருகில் சென்ற போது  மர்ம நபர்கள் சிலர், அவரை வழி மறித்துள்ளனர்.
லட்சுமி அவர்களிடம் யாரென்று விசாரிக்கும் போதே  மறைத்துவைத்திருந்த அரிவாள் உட்பட ஆயுதங்களால்  சரமாரியாக லட்சுமியை  வெட்டினர். அலறி சரிந்த லட்சுமி, ரத்த வெள்ளத்தில்  கீழே விழுந்தார். வெட்டிய மர்ம நபர்கள் ஓடிவிட்டனர்.

கொல்லப்பட்ட லட்சுமி
கொல்லப்பட்ட லட்சுமி

அந்த பகுதியில் இருந்தவர்கள்,  உடனடியாக லட்சுமியை  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே லட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த  மகேஸ்வரி மற்றும் தயளன் ஆகியோருக்கும் பண விவகாரத்தில் பிரச்சனை இருந்த்து, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.  அந்த இருவரையும் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 

More articles

Latest article