திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு!

Must read

சென்னை: சென்னையில் திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இன்று மதியம் கே.கே.நகரில் உள்ள அலுவலகத்தில் திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரன் இருந்தார். அப்போது அங்கு வந்த  போது மர்ம நபர்கள் தனசேகரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர் . அதை தடுக்க முயன்ற அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுக்கும்  அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்த தாக்குதலில் பலத்த காயம் தனசேகரன் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தசம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அங்கிருந்த  சிசிடிவி கேமரா பதிவைக்கொண்டு, தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

Latest article