திமுக முன்னாள் எம் எல் ஏ மகன் மர்ம மரணம்

Must read

காரைக்கால்

காரைக்கால் பகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பஞ்சவர்ணத்தின் மகன் கும்பகோணம் ரயில் கிராசிங் அருகே மர்மமான முறையில் பிணமாகக் கிடைத்துள்ளார்.

காரைக்கால் பகுதியில் உள்ள கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை தெருவில் வசிக்கும்  பஞ்சவர்ணம் இந்த தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.   இவருடைய மகன் வெற்றி செல்வனுக்கு 42 வயதாகிறது.  வெற்றி செல்வனுக்கு ராஜேஸ்வரி என்னும் மனைவியும் ஹன்சிகா என்னும் 6 வயது மகளும் உள்ளனர்  வெற்றிச் செல்வன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்தாக கூறப்படுகிறது.

கடந்த 26 ஆம் தேதி வெற்றிச் செல்வன் தனது காரில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.  எனவே அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர்.  எங்கும் கிடைக்காததால் ராஜேஸ்வர் தனது கணவரைக் காணவில்லை எனக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இன்று காலை கும்பகோணம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் கிராசிங்கில் ஒரு கார் வெகுநேரமாக நின்று கொண்டு உள்ளதாகவும்  அருகில் ஒருவர் மயங்கிக் கிடப்பதாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர்.  அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபர் இறந்து கிடந்ததை அறிந்து காரில் இருந்த அவரது செல்போனை ஆய்வு செய்துள்ளனர்.

அதன் மூலம் இறந்து கிடந்தவர் கோட்டுச்சேரி திமுக முன்னாள் எம் எல் ஏல் மகன் வெற்றிச் செல்வன் என்பது தெரிய வந்துள்ளது.   கும்பகோணம் மேற்கு காவல்நிலைய அதிகாரிகள் வெற்றிச்செல்வன் உடலை கும்பகோணம் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  வெற்றிச் செல்வன் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

More articles

Latest article