சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  திமுக தலைமை அறிவித்துள்ள  தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான திமுகவின் தேர்தல் அறிக்கை குழு இன்றுமுதல் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து கருத்து கேட்க உள்ளது. முதல் பயணமாக இன்று தூத்துக்குடி சென்றுள்ளது.

நடப்பாண்டு, ஏப்ரல்,. மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.  தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கி களப்பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், திமுக சார்பில், பல்வேறு குழுக்களை அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி,  தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு திமுக எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த குழு தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி வருவதுடன், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் சென்று மக்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்களின் கருத்துக்களையும் கேட்க முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல்  தமிழ்நாடு முழுவதும் பயணத்தை தொடங்குகிறது.   இன்று தூத்துக்குடியில் கருத்துக் கேட்பு பயணத்தை தொடங்கி சென்னையில் பிப்ரவரி 23 ஆம் தேதி நிறைவு செய்கிறது.

இன்று தூத்துக்குடியில் நடைபெற இருக்கும் இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொது நல­னில் அக்­கறை கொண்ட பல்­வேறு தரப்­பட்ட தொழில் முனை­வோர்­கள், வர்த்­த­கர்­கள், வியா­பா­ரி­கள், சமூக ஆர்­வ­லர்­கள் கலந்து கொள்ள மாவட்­டச் செய­லா­ளர்­களும் அமைச்சர்களுமான கீதா­ ஜீ­வன் மற்றும் அனிதா ராதா­கி­ருஷ்­ணன் ஆகியோர் கூட்­டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில், “2024 -ல் நடை­பெற இருக்­கும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­காக தி.மு.க. சார்­பில் தேர்­தல் அறிக்கை தயா­ரிக்­கும் குழு அமைக்­கப்­பட்­டு உள்ளது. இக்­கு­ழு­வின் தலை­வ­ராக தி.மு.கழக துணைப் பொதுச் செய­லா­ள­ரும், தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள் ளார்­கள். குழு­வின் உறுப்­பி­னர்­க­ளாக டி.கே.எஸ்.இளங்­கோ­வன், தக­வல் தொழில்­நுட்­பத்­துறை அமைச்­சர் பி.டி.ஆர்.பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன், தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.இராஜா, கோ.வி.செழி­யன்.எம்.எல்.ஏ., சி.வி.எம்.பி.எழி­ல­ர­சன்.எம்.எல்.ஏ., கே.ஆர்.என்.ராஜேஸ்­கு­மார்.எம்.பி., எம்.எம்.அப்­துல்லா.எம்.பி., திரு­மதி.பிரியா டாக்­டர்.எழி­லன் நாக­நா­தன்.எம்.எல்.ஏ., சென்னை மேயர் ஆகி­யோர் உள்­ள­னர். கேன்சரால் பட்டப்பாடு.. கே. பாலச்சந்தர் இப்படி பண்ணுவார்னு நினைக்கல.. நடிகர் சாய்ராம் உருக்கம் இந்த தேர்­தல் அறிக்கை தயா­ரிக்­கும் குழு­வி­னர் தமிழ்­நாட்­டின் ஒவ்­வொரு பகு­திக்­கும் நேரில் சென்று பல்­வேறு தரப்­பட்ட மக்­களை சந்­தித்து தேர்­தல் அறிக்­கை­யில் இடம்­பெற வேண்­டிய திட்­டங்­கள் குறித்து கோரிக்கை மனுக்­களை பெற உள்ளனர்.

அதன்­படி தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற தொகு­திக்கு இன்று (05.02.2024 – திங்­கள் கிழமை) காலை 10.00 மணி அள­வில் தூத்­துக்­குடி – திருச்­செந்­தூர் சாலை, காம­ராஜ் கல்­லூரி எதி­ரில் உள்ள மாணிக்­கம் மஹா­லில் கோரிக்கை மனுக்­களை பெற இருக்­கி­றார்­கள். இந்­நி­கழ்ச்­சி­யில் தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற தொகு­தி­யின் வளர்ச்­சி­யில் அக்­கறை கொண்ட பல்­வேறு தரப்­பட்ட தொழில் முனை­வோர்­கள், வர்த்­த­கர்­கள், வியா­பா­ரி­கள், விவ­சா­யி­கள், மருத்­து­வர்­கள், மீன­வர்­கள், மாண­வர் சங்­கங்­கள், தொழி­லா­ளர் நல பிர­தி­நி­தி­கள், சமூக ஆர்­வ­லர்­கள், பொது­மக்­கள் அனை­வ­ரும் இத­னையே அழைப்­பாக ஏற்று தவ­றாது கலந்து கொள்ள அன்­பு­டன் அழைக்­கி­றோம். வருகை தரும் அனை­வ­ரும் தங்­கள் கருத்­துக்­களை மனு­வாக எழு­திக் கொண்டு வர­வும் கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றார்­கள்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்! திமுக தலைமை அறிவிப்பு