சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ள நிலையில், நாளை மதியம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி, திமுக தலைமையிலான கூட்ணியில் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அத்துடன் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மதியம் 12 மணியளவில்  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

திமுகவின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.