தமிழக கவர்னரிடம் திமுக வைத்த முக்கிய கோரிக்கைகள்!

Must read

மும்பை:

மிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தி.மு.க.வைச் சேர்ந்த எம்பி-க்கள், இன்று மும்பையில் சந்தித்தது சில முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.

கடந்த 14-ம் தேதி முதல்  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்,  டில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

காவிரி மேலாண்மை அமைப்பது, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறுவிதமான  போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.

இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் தி.மு.க எம்பி-க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார்,  தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது  வாக்காளர் பட்டியலை வைத்து பணம் தந்ததற்கான ஆதாரங்களை கைப்பற்றினர்.

தமிழகம் முழுதும்  50 இடங்களில் நடந்த சோதனையில், 4.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.  விஜயபாஸ்கரின் உதவியாளர் நயினார் முகமது வீட்டில் மட்டும் 3.5 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது. மற்றொரு உதவியாளர் கல்பேஷ் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.

இன்று கவர்னர் ராம்மனோகர்ராவை சந்தித்த திமுக எம்.பிக்கள். வருமானவரி சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்குமாறும் கோரிக்கை வைத்துளஅளனர்.

மேலும் பணப் பட்டுவாடாவால் ரத்தான ஆர்.கே.நகர் தேர்தல் பற்றியும் தி.மு.க எம்பி-க்கள் முறையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More articles

Latest article