சென்னை:  திமுக – காங்கிரஸ்  இடைணுய இன்று தொகுதி பங்கீடு குறித்து  இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைமை  இன்று 2ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துகிறது .

முன்னதாக, திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக, கடந்த மாதம் (பிப்ரவரி 28) இருதரப்பும் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தரப்பில்  அதிக சீட்டுகள் வேண்டும் என கூறிய நிலையல் திமுக 25 இடங்களை மட்டுமே தர முடியும் என்பதால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை. இதை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். இதனால்  இரு தரப்புக்கும் இடையே சுமுகமான தீர்வு எட்டுவதில் சிக்கல் நீடித்தது.

இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதலமைச்சரை சந்தித்து பேசிய நிலையில், இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில்,   முக்கிய முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கூட்டணி சலசலப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ப.சிதம்பரம்….

[youtube-feed feed=1]