திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்: திருநாவுக்கரசர்

Must read

சென்னை:
மிழ்நாடு காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர், பொறுப்பேற்றதையொட்டி, நடிகர் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பனை இன்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

திருநாவுக்கரசர் -மு.க. ஸ்டாலின்
திருநாவுக்கரசர் -மு.க. ஸ்டாலின்

பிறகு, சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது எதிர்வரும் உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பேசினேன்.
கடந்த சட்டமன்ற தேர்தல் போலவே உள்ளாட்சி  தேர்தலிலும் இரு கட்சியும் கூட்டணி வைத்து  போட்டியிடும்” என்று தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில்..
செய்தியாளர் சந்திப்பில்..

மு.க.ஸ்டாலினை திடீரென த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துபேசியதும், இது குறித்து செய்தியாளர்களிடம், உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியதாக பூடகமாக சொல்லியதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.   தி.மு.க.வுடன் த.மா.கா. கூட்டணி வைத்தால், ஏற்கெனவே கூட்டணியில் இருக்கும் காங்கிரஸின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.
தற்போது, உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என திருநாவுக்கரசர் அறிவித்ததை அடுத்து, கூட்டணி குறித்த பரபரப்பு அடங்கியிருக்கிறது.

More articles

Latest article