சென்னை; ஆளுநர் உரையின்போது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டதை தவிர்த்திருக்க வேண்டும் என்று கூறிய சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின்போது நடந்தது என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் முதல் நாளில், ஆளுநர் உரையின்போது நடந்த அசாதாரண சம்பவங்கள் குறித்து அவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். மேலும், சட்டப்பேரவையில் விதிகளுக்கு உள்பட்டுதான் எம்எல்ஏக்கள் பேச வேண்டும் என்றும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டதை தவிர்த்திருக்க வேண்டும் அப்பாவு அவையில் கேட்டுக் கொண்டார்.
ஆளுநர் உரையின்போது, அசாதாரண சூழலை உருவாக்கியது, அவையோ, அரசோ இல்லை என்றவர், . சட்டப்பேரவையில் அசாதாரண சூழலை உருவாக்கியது அரசு அல்ல. உரையில் சில பகுதிகளை விடுத்தும் சில பகுதிகளை இணைத்தும் ஆளுநர் பேசியதால் பேரவையில் அசாதாரண சூழல் நிலவியது.
ஆளுநர் உரையில் குளறுபடிகள் இருந்தது. உரையை வாசிப்பது மட்டுமே ஆளுநரின் கடமை. உள்ளே இருக்கும் வரிகளுக்கு அரசே பொறுப்பு. அவர் அதை கடந்து சென்றதால் அசாதரண சூழல் ஏற்பட்டது. பேரவையில் அசாதரண சூழலை உருவாக்கியது அரசு அர்லல. ஆளுநர்கள் எதை செய்ய வேண்டும்,
ஆளுநர் உரையில் இருக்கும் வரிகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பு. முதலமைச்சரின் மதிநுட்பத்தால்தான் சட்டமன்றத்தின் மாண்பு காக்கப்பட்டது என்றவர், இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் முதல்வர் ஸ்டாலின் காத்துள்ளார். தமிழ்நாடே முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கையை பாராட்டி வருகிறது என்றவர்,. சட்டப்பேரவையின் மாண்பை காக்கும் வகையில் செயல்பட்ட முதல்வருக்கு நன்றி.
எதை செய்யக்கூடாது என எடுத்துக்காட்டும் வகையில்தான் தீர்மானம் இருந்தது, மேலும், ஆளுநரை உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசும் எம்எல்ஏக்கள் பேரவையின் மாண்பை காக்கும் வகையில் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அப்பாவு ஆளுநர் உரையின் போது காட்டிய கண்ணியத்திற்காக தமிழ்நாடே ஒட்டுமொத்தமாக முதல்வர் ஸ்டாலினின் துணிவை பாராட்டிக்கொண்டு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக ஆளுநர் உரைக்குப் பிறகு முதலமைச்சர் பேசிய விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏ கே.பி. முனுசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். பேரவையில் உரையாற்றி ஆளுநர் அமர்ந்த பின் முதல்வர் பேச அனுமதித்திருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
இதற்கு பதில் அளித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு , முதல்வர் பேசாமல் இருந்திருந்தால் மாநிலத்திற்கே தலைகுனிவாகி இருக்கும். ஆளுநர் உரைக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வராமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கும் என விளக்கம் அளித்தார்.