நெல்லை: அ.தி.மு.க.,வினர் 250 பேர் தி.மு.க.வுக்கு தாவல்!

Must read

tn-flags
நெல்லை:
திருநெல்வேலி மாவட்டத்தில் 250 அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
திருநெல்வேலிபுறநகர் மேற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணிச்செயலாளர் ராசையா மற்றும், அதிமுக ஒன்றிய இளைஞர் & இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலைவாணி ஆகியோர் தலைமையில் 250 அதிமுகவினர், நெல்லை புறநகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் தங்களை திமுக வில் இணைத்து கொண்டனர்.
உள்ளாட்சி தேர்தலில் சீட் கொடுக்கப்படதாததால் அதிருப்தியில் இவர்கள் கட்சி மாறியதாக நெல்லை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

More articles

Latest article