சென்னை: பிப்ரவரி 7ந்தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் தேர்தல் பிரசார வியூகம் வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், மறைந்த விஜயகாந்த் கட்சியான  தேமுதிக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கோயம்பேடு தலைமையகத்தில், பிப்.7-ம் தேதி காலை 10 மணிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது

இது தொடர்பாக தேமுதிக தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், பிப்ரவரி 7ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.