சென்னை: குரூப் 2 நேர்முகத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும்  12ந்தேதி முதல் 17ந்தேதி வரை  நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசுத் துறைகளில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள 6,151 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2022-ல் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வுகொண்ட குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து, தேர்வு செய்யப்பட்டவர்களின்  சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.

அதன்படி,  நேர்முகத் தேர்வுகளுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு  பிப்ரவரி 12 முதல் 17-ம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள், அனைத்து அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் என்றும், ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைகூட சமர்ப்பிக்க தவறினால் அடுத்தகட்ட தேர்வுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது.