விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Must read

ண்டன்

ண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

தற்போது லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.   இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாகும்.  நேற்று நடந்த காலிறுதி சுற்றில் உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் ஹங்கேரி நாட்டை சேர்ந்த ஃபுக்சோவிக்ஸ் ஆகியோர் மோதினர்.

இந்த காலிறுதி போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஜோகோவிச் ஆதிக்கம் காணப்பட்டது.   அவர் நேற்றைய காலிறுதி போட்டியில் 6-3,6-4,6-4 என்னும் செட் கணக்கில் ஃபுக்சோவிக்ஸை தோற்கடித்துள்ளார்.  இதன் மூலம் ஜோகோவிச் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

நாளை நடைபெறும் இரு அரையிறுதி போட்டிகளில் ஒரு போட்டியில் ஜோகோவிச் மற்றும் கனடா வீரர் சபவலோ ஆகியோர் மோதுகின்றனர்.  மற்றொரு அரையிறுதி போட்டியில் இத்தாலி நாட்டு வீரர் பெரோட்டினி மற்றும் போலந்து நாட்டின் ஹர்காஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

 

More articles

Latest article