ண்டன்

பிரிட்டன் பிரதமர் கடந்த 2019 ஆம் ஆண்டு கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வு அவரை சிக்கலில் ஆழ்த்தி உள்ளது.

பிரிட்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தால் முஸ்டிக் தீவில் உள்ள தேவாலயம் ஒன்று நிர்வாகம் செய்யப்படுகிறது.   இந்த தேவாலயத்தில் பிரம்மாண்டமாகக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம்.  இதில் கலந்துக் கொள்வோர் ஏராளமான கட்டணம் செலுத்தி கலந்து கொள்வார்கள்.   இந்த தேவாலயத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொண்டுள்ளார்.

அவருடன் அப்போதைய காதலியும் தற்போதைய மனைவியுமான கேரி சைமண்ட்ஸும் கலந்துக் கொண்டுள்ளார்.   இதில் கலந்துக் கொல்ல போரிஸ் ஜான்சன் செய்த செலவு குறித்து தற்போது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது.     எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.  இந்த விவகாரம் போரிஸ் ஜான்சனை கடும் சிக்கலில் ஆழ்த்தி உள்ளது.

இந்த கொண்டாட்டத்துக்கான செலவை போரிஸின் கன்சர்வேடிவ் கட்சி ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.  கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு போரிஸ் ஜான்சன் எவ்வித ஆடம்பர மற்றும் சொந்த செலவுக்குக் கட்சி பணம் அளிக்கக் கூடாது எனச் சட்டமாக்கி இருந்தார்.    அவரே இந்த சட்டத்தை மீறி உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த தீவில் உள்ள டேவிட் ரோஸ் என்னும் பிரிட்டன் தொழிலதிபரின் ஆடம்பர வில்லாவில் போரிஸ் வாடகைக்குத் தங்கியதாகக் கூறப்படுகிறது.  இந்த விலாவுக்குத் தினசரி வாடகை 21,200 அமெரிக்க டாலர் ஆகும்.   இந்த பணத்தையும் கட்சி செலுத்தி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   எனவே இந்த செலவுகளுக்கான கணக்கை கோரி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதம் போரிஸ் ஜான்சனுக்கு சிக்கலை அதிகரித்துள்ளது.