தீபாவளி கொண்டாட்டம்: மதுவில் மயங்கிய மங்கைகள்!

Must read

சேலம்,
சேலம் அருகே ஓமலூரில் தீபாவளி பண்டிகையை மதுபோதையின் மயங்கி விழுந்து கொண்டாடிய பெண்கள்… சமுக மாற்றத்தின் அறிகுறியா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில், தீபாவளி பண்டிகையை மது போதையால் கொண்டாடிய பெண்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் சாலையிலேயே அலங்கோலமாக மயங்கி விழுந்தனர்.
தீபாவளி திருநாள் நேற்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையடுத்து வழக்கம்போல மத்தியம் 12 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்பட்ட உடன் மது பிரியர்கள் தீபாவளியை மதுவுடன் கொண்டாட தொடங்கிவிட்டனர்.
salem
அந்தவகையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் மேட்டூர் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய பெண்கள் உள்ளிட்டோர், அதன் அருகிலேயே அருந்துவிட்டு மயங்கி விழுந்தனர்.
ஒரு சிலர் சாலையில் விழுந்தும், ஒரு சிலர் கடைகளின் அருகில் தள்ளாடியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதில் பெண் ஒருவரும் மது அருந்திவிட்டு தள்ளாடியது அப்பகுதி மக்களை முகம்சுளிக்க வைத்தது.
இதுகுறித்து  அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர் கூறியதாவது,
சமூக மாற்றத்தின் எதிரொலிபோல இது.. ஆண்களை போலவே பெண்களும் வீதிக்கு வந்துவிட்டார்கள்…வாழ்க பெண்கள் உரிமை  என்று புலம்பிவிட்டு சென்றார்.

More articles

Latest article