சென்னை,
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 21,289 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.
koyambedu
இந்த மாதம் (அக்டோபர்) 29ந் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அதையொட்டி பொதுமக்கள், தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருவர். இதன் காரணமாக பயணிகளின் வசதிகளை முன்னிட்டு, சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, அக்டோபர் 26, 27, 28 ஆகிய 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 11,225 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,
அதோ போல, தமிழகத்தின் இதர பகுதகளில் இருந்து 10,064 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்கு வரத்துக் கழகம் அறிவித்துள்ளது.