9 கிலோ தங்கம் கொள்ளை! பலே காதல் ஜோடி கைது!

Must read

சென்னை:
சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டதோடு, கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அவரது காதலியும்  கைது செய்யப்பட்டுள்ளார்.
g
கடந்த செப் 3 அன்று  சென்னை அயனாவரத்தில்  கோபாராம் என்பவரது நகைக்கடையில்  9 கிலோ தங்க நகைகள் மற்றும்  ரூ.2 லட்சம் பணத்தை கடையில் வேலை செய்த தீபக் என்ற வாலிபர் கொள்ளையடித்துவிட்டு மாயமானார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தீபக்கும் அவனது  காதலி மற்றும் மூன்று நண்பர்களும் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.  கொள்ளையடித்துவிட்டு  ராஜஸ்தானுக்கு இந்த கொள்ளைக்கும்பல் தப்பியோடி விட்டது. இவர்கள் தங்கள் செல்போன்களை அணைத்துவைத்துவிட்டதால் காவல்துறையினர் இவர்களை டிரேஸ் செய்வது மிகவும் சிரமமாகிவிட்டது.

கொள்ளை நடந்த கடை
கொள்ளை நடந்த கடை

ஆனாலும் காவல்துறையினரின் கடுமையான தேடலுக்குப் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தீபக் சிக்கினார். அவரைக் கைது செய்து சென்னை கொண்டு வர இன்ஸ்பெக்டர் கண்ணகி தலைமையில் தனிப்படை ஜெய்ப்பூர் சென்றுள்ளது.
இந்த நிலையில் தீபக்கின் காதலியும் நேற்று ஜெய்ப்பூர்  காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். அவரிடமும் கொள்ளையடிக்கப்பட்ட போன நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விரைவில் சென்னை கொண்டுவரப்படுவர்.
 

More articles

Latest article