சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விமான கட்டணத்துக்கு சமமாக உயர்ந்து வருகிறது. அதை தடுக்க வேண்டிய தமிழகஅரசு கண்ணை மூடிக்கொண்டு உள்ளது. இது பயணிகளிடையே கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. தூக்கிக் கொண்டிருக்கும் தமிழகஅரசு, கண்விழித்து, கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு சென்னை போன்ற பல நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை. இந்த சமயங்களில் தமிழக அரசு, பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துங்கள் இயக்காமல், ஓரளவே சிறப்பு பேருந்துகளை இயக்குவதால், ஏராளமானோர் தனியார் பேருந்துளை நோக்கி செல்கிறார்கள். தமிழகஅரசு தீபாவளி பண்டிகைக்க 16,888 சிறப்பு பேருந்து சேவைகள்இயக்கப்படும் என அறிவித்து உள்ளது. ஆனால், இதில் பெரும்பாலான பேருந்துகள் நீண்ட தூரத்துக்கு உட்கார்ந்து செல்லக்கூட லாயக்கற்ற வகையில்தான் உள்ளது. மேலும், சென்னையில் இருந்து நெல்லை செல்ல தனியார் பேருந்துகள் 10 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் நிலையில், அரசு பேருந்துகள் குறைந்த பட்சம் 13மணி நேரம் முதல் 15மணி நேரம் வரை எடுத்துக்கொள்கின்றன. அதுவும் சிறப்பு பேருந்துகள் செல்ல குறைந்த பட்சம் 16மணி நேரம் வரை எடுத்துக்கொள்கிறது. இதனால், பயணிகள் அரசு பேருந்துகளை நாட மறுக்கின்றனர். இதை சாக்காக வைத்து ஆம்னி பேருந்துகள் பயணக் கட்டணத்தை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுகின்றன.
இதை தடுக்கவேண்டிய தமிழகஅரசு, வழக்கமாக விடுக்கும் எச்சரிக்கை மட்டுமே விடுப்பதுடன், ஒதுங்கிக்கொள்கிறது. இதனால், ஆம்னி பேருந்து உரிமை யாளர்களின் கொள்ளையோ கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆயுத பூஜை நேரத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆம்னி பேருந்து கட்டணத்தை விட தற்போது (தீபாவளி) மேலும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை விடுமுறை விட அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்கள் ஆகும். இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் வருகிற 21-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! அமைச்சர் சிவசங்கர் தகவல்
இந்த விஷயத்தில் தமிழகஅரசு எப்போதும்போல, புகார் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்காமல், முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து, கட்டணக் கொள்ளையை தடுக்க முன்வரவேண்டும். அல்லது, தனியாருக்கு இக்வலாக அரசு பேருந்துகளை நவீனப்படுத்தி இயக்க வேண்டும். மக்களுக்கான அரசு என்றால், உடனே மக்கள் நலனின் அக்கறை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்த ஆம்னி பேருந்துகள்: இருமடங்கு கட்டணம் உயர்வு..