சென்னை:

தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ந்தேதி வர உள்ள நிலையில், நேற்று ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கியது. சுமார் 15 நிமிடத்திற்குள்  அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டதாக ரயில்வே தெரிவித்து உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதையொட்டி ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

தீபாவளிக்கு பண்டிகையொட்டி சொந்த ஊருக்கு ரயிலில் செல்ல விரும்புவர்களுக்கு  நேற்று முன்பதிவு தொடங்கியது. இதில்,  சுமார் 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தீபாவளி நெருங்க தனியார் பேருந்துகள் கட்டணம் விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து விடுவதால், குறைந்த கட்டண பயணமான ரயில் பயணத்தையே ஏராளமானோர் விரும்பு கின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ந்தேதி ஞாயிற்றுக்கிமை வருவதால், அரசு ஊழியர்கள் தங்களுக்கு ஒருநாள் விடுமுறை போச்சே என்று வருத்தப்பட்ட  நிலையிலும், தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தீபாவளியை கொண்டாட இப்போதே தயாராகி வருகின்றனர்.

அக்டோபர் 22ம் தேதி பயணம் மேற்கொள்ள  விரும்பும் பயணிகளுக்கு நேற்று  (24/06/2019) முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன.

அதுபோல , அக்டோபர் 23ம் தேதி பயணம் மேற்கொள்பவர்கள் இன்று (25/06/2019) டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டனர்.  அக்டோபர் 24ம் தேதி சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் ஜூன் 26ம் தேதியும்,   அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் ஜூன் 27ம் தேதியும்,  அக்டோபர் 26ம் தேதி ஊருக்கு செல்ல வேண்டுவோர்கள் ஜூன் 28ம் தேதி டிக்கெட் புக் செய்ய வேண்டும்.

அதே போன்று தீபாவளி அன்று (அக்டோபர் 27ம் தேதி) பயணம் செய்ய ஜூன் 29ம் தேதி டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.