சென்னை:

மிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வரும் மார்ச் மாதம் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அடுத்த மாதம் (மார்ச்) .5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

3 நாட்கள் நடைபெற உள்ள தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட நிதி  நிலவரங்கள் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் காவல் பணிகள் குறித்து விவாதிக்கபடும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜெ. முதல்வராக இருந்தபோது கடந்  2013ம் ஆண்டு நடைபெற்ற நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.