சென்னை:

பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையஞராஜாவின் அறையில், அவர் இசையமைக்க விடாமல் சிலர் இடையூறு செய்து வருவதாக எல்வி பிரசாத் பேரன் மீது இளையராஜாவின் உதவியாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் செயல்பட்டு வரும்,  ஸ்டூடியோ-1, அதன் நிறுவனர் எல்.வி.பிரசாத், பல ஆண்டுகளுக்கு முன்பே  இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைப்பதற்காக வழங்கியுள்ளார். இந்த ஸ்டூடியோவில்தான்  இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக இசை அமைத்து வருகிறார்.

தற்போது,  எல்வி.பிரசாரத்தின் பேரன் சாய் பிரசாத், எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஸ்டூடியோ1-ஐ கைப்பற்றி, அதில் பல கம்ப்யூட்டர்களை அமைத்து உள்ளதாகவும், இளையராஜா இசை அமைக்க முடியாமல் தொந்தரவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இளையராஜாவின் உதவியாளர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவில்,  எல்.வி. பிரசாத்தின் பேரனுமாகிய சாய் பிரசாத் மற்றும் ஊழியர்கள் பாஸ்கர் மற்றும் சிவராமன்  ஆகியோர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஸ்டுடியோவை ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதன் காரணமாக  இளையராஜா குழுவில் உள்ள இசைக்கலைஞர்களின்  இசைக்கருவிகள் சேதமாக வாய்புள்ளதாகவும் புகாரில தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரை பெற்றுக்கொண்ட   விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.