சென்னை:

ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விண்வெளி திட்டத்தின் கீழ் ஏற்கனவே 7 செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. அதன்படி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். – 1 எச் என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி- 39 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய 2வது ஏவுதளத்தில் இருந்து இரவு 7 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைகோள், இயற்கை பேரிடர் காலங்களில் தரை, வான் மற்றும் கடல் வழி பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கி.மீ. சுற்றளவு பரப்புக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக
கண்காணிக்கலாம். தரை, வான் வெளியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், விண்ணில் ஏவப்பட்ட இந்த செயற்கைகோள் திட்டம் தொழில்நுட்ப காரணங்களால் தோல்வியில் மடிந்ததாக இஸ்ரோ தற்போது அறிவித்துள்ளது.