சென்னை: மாற்றுத்திறனாளிகள் துறையின் கடும் ஊனமுற்றோர் உதவி ரூ2000ஆக உயர்த்தி அறிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்து உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்புஉதவித் தொகையாக ரூ.2ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின்ர் வரவேற்பும், நன்றியும் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து  டிவிட் பதிவிட்டுள்ள, தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம்! இது எமது சங்க தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!  இதன்முலம் சுமார் 2்.6லட்சம் பேரேபயன்பெறுவர்!

ஆனால், தெலங்கானா, ஆந்திரா போல் 40% ஊனமுற்ற அனைவருக்கும் ரூ3000 உதவித் தொகை உயர்த்தணும் என்பதே கோரிக்கை! என்று தெரிவித்து உள்ளது.